Friday, May 11, 2012

உயிர் - பாகம் 1 - கல்லூரியின் கருவறை





உயிர் - பகுதி 1.....கல்லூரிக் கருவறை



கருகிய மேகம் சூழ்ந்த காற்று வீசும் காலைப் பொழுதாய் அமைந்தது விஜய் கல்லூரி செல்லும் முதல் தினம்.,....
கல்வியை முதலாக கொண்டு பணம் சம்பாதிக்கும் தலை சிறந்த பொறியாளர் உற்பத்தி செய்யும் கல்லூரித் தொழிற்சாளைகளில் அதுவும் ஒன்று....
சாதாரண மாணவானாய் பற்பல கனவுகளுடன் தன் குடும்ப சுமையையும் சுமந்து நடக்கிறான்...அந்த நகர சூழ்நிலை அவன் கண்களுக்கு நரகமாய் தெரிந்தது....
நிமிடத்துக்கு நிமிடம் பறக்கும் கார்கள், வண்டிகள் , ஒருவரை ஒருவர் நெரித்து தள்ளுதல், அனைவரும் பணம் என்ற அன்பில் பிணமாக வாழ்வதை கண்டு வியக்கிறான்....
அவனது சொந்தங்களோ விவசாயியான அவன் தந்தையின் வியர்வையும் அவன் அன்னையின் அளவில்லாத அன்பும்....
முதல் நாள் கல்லூரி ...இயல்பான தயக்கத்துடன் காலை உணவு கொள்ள CANTEEN செல்கிறான்...
ஒரு 100 ரூபாய் நோட்டை நீட்டி "நான்கு இட்லி" என்றான்....
"தம்பி மொத நாள் காலங்காத்தால நோட்டை நீட்டுனா சில்லறைக்கு நா எங்க போவேன்..சிலரை இருந்த கொடு இல்ல கெளம்பு" என்றான்
சில்லறை இன்றி உணவு கூட தர மறுக்கும் மாந்தருக்கு நடுவில் சில்லறை இன்றி வாரி வழங்கும் தன் ஊர் மக்களை எண்ணினான்.....
என்ன செய்வதென்று தெரியாது நின்று கொண்டிருந்த அந்த வேளையில் தான் அந்த கை நீட்டியது....
"அவனுக்கும் சேர்த்து கொடுங்கள்" என்றது அந்த குரல்.....

:):)



அடுத்த பகுதியை படிக்க...

உயிர் - பாகம் 2 - பேசுகிறேன் பேசுகிறேன்



No comments: